THOUSANDS OF FREE BLOGGER TEMPLATES

mercredi 25 mars 2009

ஒற்றைத் தலைவலி


தலைவலியும்,காய்ச்சலும் தனக்கு வந்தால் தெரியும் என்பார்கள்".தலைவலியால் அவதிப்படாத மனிதர்களே இருக்கமுடியாது என்பதால் தலைவலி தொடர்பான ஆராய்ச்சிகள் உலகெங்கும் தொடர்ந்து கொண்டுதானிருக்கிறது.தலைவலியில்,ஒற்றைத் தலைவலி எனப்படும்"மைகிரேன்"தலைவலியால் அவதிப்படுவோர் பலர்.இத்தகைய வலி வந்தால் எதுவுமே செய்ய இயலாது.சிலருக்கு இரண்டு மூன்று நாள் வரை கூட இது நீடிக்கும்.தலையில் நீர் கோர்ப்பதால் இந்த மைகிரேன் தலைவலி வருவதாக கூறப்பட்டாலும்,தட்ப வெப்ப நிலை மற்றும் போதிய காற்று இல்லாததாலும் மைகிரேன் தலைவலி வரும் என ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். வெப்ப நிலை திடீரென உயர்வதால் தலைவலி உண்டாகும் என்றும் காற்றழுத்த வேறுபாடு காரணமாக தலைவலி ஏற்படும் என்றும் ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். இஸ்ரேலைச் சேர்ந்த நரம்பியல் டாக்டர் சேத் தலைமையிலான மருத்துவக் குழு கடுமையான தலைவலியால் அவதிப்படும் 7,054-பேரை ஆய்வு செய்தது.இவர்களில் பெரும்பாலோர் 7-ஆண்டுகளுக்கும் மேலாக கடுமையான தலைவலியால் அவதிப்பட்டு வந்ததாகக் கூறினர். இதற்கான காரணத்தை ஆராய்ந்தபோது,தட்ப வெப்ப நிலையில் முந்தைய தினத்தைக் காட்டிலும் 5-டிகிரி செல்சியஸ் உயரும்போது இவர்களுக்கு கடும் தலைவலி ஏற்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.அத்துடன் காற்றழுத்தத்தில் ஏற்படும் மாற்றம் காரணமாக 72-மணி நேரம் வரை லேசான தலைவலியுடன் இவர்கள் அவதிப்பட்டதும் ஆய்வில் தெரியவந்துள்ளது. இத்தகைய ஆராய்ச்சி முடிவு மிகவும் உபயோகமானது என்று லண்டனில் உள்ள நரம்பியல் துறை பேராசிரியர் பீட்டர் கோட்ஸ்பி தெரிவித்துள்ளார்.இதன்மூலம் நோயாளிக்கு உரிய மருத்துவ சிகிச்சை அளிக்க முடியும்.மைகிரேன் தலைவலியை அதிகரிக்கும் காரணிகளில் சில வகை உணவு மற்றும் மதுப் பழக்கம் மட்டுமின்றி மன இறுக்கமும் காரணம் என ஆய்வில் தெரியவந்துள்ளது.

dimanche 21 décembre 2008

மகிந்தவின் முன்னைய பிறவியும் மகிந்தவும்

மகிந்தவையும் குரங்கையும் ஒப்பிட்டால்

முட்டாள் மன்னன் ౨౩மகிந்த

samedi 20 décembre 2008

இணையத்தள உபயோகம் மூளையின் செயல்திறனை ஊக்குவிக்கிறது அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள்


இணையத்தளங்களை உபயோகிப்பதானது நடுத்தர வயதுடையவர்களுக்கும் வயதானவர்களுக்கும் மூளையின் திறன் பலமடைய உதவுவதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.தீர்மானமெடுத்தல், குழப்பநிலைகளுக்கான காரணத்தை பகுத்தாராய்தல் என்பனவற்றை கட்டுப்படுத்தும் மூளையின் மையங்கள், இணையத்தள தேடுதலின்போது ஒழுங்கமைக்கப்படுவதாக மேற்படி ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. மேலும், வயதாதலுடன் தொடர்புடைய மனோவியல் மாற்றங்களை தடுக்கவும் இணையத்தள தேடுதல் உதவுவதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். மேற்படி ஆய்வின் முடிவுகள் அமெரிக்க மனோவியல் மருத்துவ வெளியீட்டில் இடம்பெற்றுள்ளன. மூளை வயதாவதன் காரணமாக அதன் கலங்களின் செயற்பாடுகளிலான குறைபாடு உள்ளடங்கலான பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன. குறுக்கெழுத்து புதிர்கள் போன்றவற்றின் மூலம் மூளையின் செயற்பாட்டு திறனை ஊக்குவிக்க முடியும் என முன்னர் கண்டறியப்பட்ட நிலையில், அதற்கு இணையத்தள பயன்பாடும் கணிசமான அளவில் உதவுவது தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேற்படி ஆய்வுக்கு தலைமை தாங்கிய பேராசிரியர் காரி ஸ்மோல் விபரிக்கையில், ""இணையத்தள தேடலானது மூளையின் சிக்கல்மிகு செயற்பாடுகளுடன் தொடர்புடையதாக உள்ளது. இது மூளையின் தொழிற்பாட்டை விருத்தி செய்கிறது'' என்று கூறினார்

எடை குறைப்பு மாத்திரைகளால் உயிருக்கு ஆபத்து


நவீன வாழ்க்கை முறை, உணவுப்பழக்க வழக்கம், உடற்பயிற்சி செய்யாதது போன்ற காரணங்களால் எடை அதிகரித்து உடல் குண்டாகிறது. இங்கிலாந்து நாட்டில் மட்டும் 97 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் குண்டு உடலை சுமக்க முடியாமல் நடக்கிறார்கள்.குண்டு உடலை குறைக்க விரும்பும் இவர்கள் கடைகளில் கிடைக்கும் மாத்திரைகளை வாங்கி சாப்பிட்டு எடையை குறைக்கிறார்கள். இது போன்ற உடல் எடை குறைப்பு மாத்திரைகள் அபாயகரமானது என்று இங்கிலாந்து டாக்டர்கள் எச்சரித்துள்ளனர்.ரிமோனாபென்ட் அல்லது அக்கம்பிளியா போன்ற மாத்திரைகளை பயன் படுத்துகிறவர்களுக்கு மன அழுத்தம், மனநல பாதிப்பு போன்றவை ஏற்பட வாய்ப்பு உள்ளது. அது மட்டுமல்ல இது போன்ற மாத்திரைகளை பயன்படுத்துகிறவர்களை தற்கொலைக்கும் துண்டிவிட வாய்ப்பு உள்ளது என்றும் டாக்டர்கள் எச்சரித்துள்ளனர்.இப்போது அந்த மாத்திரைகளுக்கு டாக்டர்கள் தடை விதித்துள்ளனர்

அமைதியான வாழ்க்கைக்கு ஆழ்ந்த தூக்கம்!


பகலில் நாம் சுறுசுறுப்பாக வேலைபார்ப்பதை இரவு தூக்கம் தான் தீர்மானிக்கிறது.சரியான தூக்கம் இல்லை என்னும் போது நமது அன்றாட பணிகள் பாதிப்படைகின்றன.சராசரியாக ஒருநாளைக்கு ஏழரை மணி நேரமாவது தூங்க வேண்டும்.எனினும் இந்த அளவு நபருக்கு நபர் மாறுபடுகிறது.பொதுவாக இந்தியர்கள் நள்ளிரவுக்கு பின் தான் தூங்கச்செல்கின்றனர். 61 சதவீதம் பேருக்கு 7மணிநேர தூக்கம் கூட இல்லை.பெரும் பாலும் தூக்கமின்மைக்கு காரணமாக கூறப்படுவது பணிச்சுமையே. பி.பி.ஓ.,நிறுவனங்களில் பணியாற்றுபவர்கள் சரியான நேரத்துக்கு தூங்கச்செல்வதில்லை. இரவில் "டிவி" பார்ப்பதால் பலருக்கு படுக்கைக்கு சென்ற பின்னரும் தூக்கம் வருவதில்லை.நோய் எதிர்ப்புசக்தியை அதிகரித்துக்கொள்ள முடியாது:உடல்நலத்தை பாதுகாப்பதில் தூக்கம் முக்கிய பங்காற்றுகிறது.தூக்கமின்மையால் இதய நோய்,பக்கவாதம்,உடல் பருமனாதல்,நீரிழிவு நோய்,மன அழுத்தம் போன்றவை வரலாம்.நோய் எதிர்ப்பு செல்கள் எலும்பு மஜ்ஜையில் உருவாகின்றன.தூங்கும் போது தான் இவற்றின் உற்பத்தி நடைபெறுகிறது.வைரஸ்,பாக்டீரியா போன்றவற்றின் தாக்குதல்களில் இருந்து மட்டுமின்றி கேன்சரில் இருந்தும் பாதுகாக்க இந்த நோய் எதிர்ப்பு செல்கள் அவசியம்.குறைவாக தூங்குபவர்கள் அதிகம் உடற் பயிற்சி செய்வதினாலோ,நன்கு சாப்பிடுவதாலோ நோய் எதிர்ப்புசக்தியை அதிகரித்துக்கொள்ள முடியாது.தூக்கமின்றி ஒருநாள் முழுவதுமாக செலவிட்டால் நோய் எதிர்ப்பு செல்களின் எண்ணிக்கை 37சதவீதம் வரை குறைவதாக கண்டறிந்துள்ளனர்.குறைவாக தூங்குபவர்களுக்கு இதயம் தொடர்பான பிரச்னைகள் விரைவில் ஏற்படும்.உடலில் உள்ள சுரப்பிகளையும் இது பாதிக்கிறது.அடிக்கடி பசியுணர்வை தூண்டுவதால்,அதிகம் சாப்பிட நேரிடுகிறது. உடல் பருமனாவதுடன்,சர்க்கரை நோய்க்கான வாய்ப்பும் அதிகரிக்கிறது. மூளையில் உள்ள வேதிப்பொருட்கள் சரியாக செயல்படவும்,மன அழுத்தம்,கோபம்,தேவையில்லாத துக்க உணர்ச்சி போன்றவற்றை தடுக்க தூக்கம் அவசியம்.அமைதியான,இருட்டான சூழலே தூங்குவதற்கு ஏற்றது.ஒவ்வொரு நாளும் இரவு 10மணிக்கு தூங்கி,காலை 5.30க்கு விழிப்பதை வழக்கமாக கொள்ளவும்.தூங்குவதற்கு இரண்டு மணி நேரத்துக்கு முன்னதாகவே இரவு உணவை முடித்துக்கொள்ளவும்.தூங்கச் செல்வதற்கு முன் டீ,காபி குடிப்பதை தவிர்க்க வேண்டும்.உடற்பயிற்சி,தினமும் 4 கி.மீ.,நடைப்பயிற்சி செய்வதை வழக்கமாக கொள்ளவும். தொடர்ந்து "யோகா" செய்பவர்களுக்கு தூக்கம் நன்றாக வரும்.தினமும் படுக்கைக்கு செல்வதற்கு முன் புத்தகம்,செய்தித்தாள் படிப்பது,பால் குடிப்பது என ஏதாவது ஒரு பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ளலாம்.இரண்டு வாரங்களுக்கு மேலாக தூக்கமின்மை பிரச்னை நீடித்தால் டாக்டரை சந்தித்து ஆலோசனை பெற வேண்டும்

தற்கொலைக்கும் மரபணு சார்ந்த இரசாயனத் தொழிற்பாட்டுக்கும் தொடர்பு


தற்கொலை செய்பவர்களின் மூளையில் மெதைலேசன் (methylation) என்ற செயற்பாடு அதிகமாக இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனால் நடத்தையை கட்டுப்படுத்தும் இரசாயன தகவல் வாங்கிகளின் தொழிற்பாடு மூளையில் சீர்குலைவதால் அல்லது தடுக்கப்படுவதால் தற்கொலைக்கு தூண்டப்படுகின்றனர் என்று கனடாவில் நடத்தப்பட்ட ஆய்வில் இருந்து கண்டறியப்பட்டுள்ளது.இந்த மெதைலேசன் என்பது தேவையற்ற மரபணுக்கள் அவற்றின் இயல்பை வெளிக்காட்டுவதைத் தடுக்க இயற்கையாக உடலால் பிரயோகிக்கப்படும் ஒரு இரசாயனச் செயன்முறையாகும்

புற்று நோய், இதய நோய் தடுக்கும் கருஞ்சிவப்பு தக்காளி


புற்றுநோய் மற்றும் இதய நோயில் இருந்து பாதுகாப்பு அளித்து, வாழ் நாளை அதிகரிக்கும் கருஞ் சிவப்பு தக்காளியை விஞ் ஞானிகள் கண்டு பிடித்துள்ளனர். தாவரங்கள், அவற்றில் உள்ள ரசாயனங்கள், நோய் எதிர்ப்பு குணங்கள் குறித்து ஆராய, புளோரா என்ற அமைப்பு துவக்கப்பட்டுள்ளது. ஐரோப்பிய கமிஷன் துவக்கியுள்ள இந்த புளோரா திட்டத்தின் கீழ், ஐரோப்பிய மையங்கள் மற்றும் பிரிட்டனர், நார் விச்சில் உள்ள ஜான் இன் னஸ் மையம் இணைந்து, கருஞ்சிவப்பு தக்காளியை உருவாக்கி உள்ளனர். தோட்டத்தில் வளர்க்கப்படும் செடியின் இரண்டு வகை ஜீன்களை பிரித்தெடுத்து, கருஞ்சிவப்பு தக் காளி உருவாக்கப்பட்டுள்ளது."பி53' என்ற ஜீனில் குறைபாடுகள் இருந்தால், புற்று நோய் மற்றும் இதய நோய் ஏற்படும். இந்த குறைபாடு உள்ள எலிகளிடம் பரிசோதித்ததில், கருஞ்சிவப்பு தக்காளி புற்று நோய் மற்றும் இதய நோய்களை எதிர்க்கிறது என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த குறைபாடுகள் உள்ள எலிகள் மூன்று விதமாக பிரிக்கப்பட்டன. ஒரு பிரிவு எலிகளுக்கு சாதாரண உணவு அளிக்கப்பட்டது. இன்னொரு பிரிவு எலிகளுக்கு 10 சதவீதம் சிவப்பு நிற தக்காளி பவுடர் உணவாக அளிக்கப்பட்டது. மூன்றாவது பிரிவு எலிகளுக்கு 10 சதவீதம் கருஞ்சிவப்பு தக்காளி பவுடர் அளிக்கப்பட்டது.சாதாரண மற்றும் சிவப்பு தக்காளி உணவு உட்கொண்டு வந்த எலிகளின் வாழ்நாள் 142 நாட் களில் முடிந்தது. ஆனால், கருஞ்சிவப்பு தக்காளியை உணவாக சாப்பிட்டு வந்த எலிகளின் வாழ்நாள் 182 நாட்களாக நீடித்தது. புற்று நோய் மற்றும் இதய நோய் தாக்கினாலும், கருஞ்சிவப்பு நிற தக் காளிகள் வாழ்நாளை அதிகரிக்கும் என்பது இதன் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால், எந்த விதமான காரணிகள், புற்று நோய் அல்லது இதய நோயை தடுக்கின்றன என்பது துல்லியமாக கண்டறியப் படவில்லை. கருஞ்சிவப்பு தக்காளியின் மருத்துவ, ரசாயன குணம் குறித்த அடுத்த கட்ட சோதனைக்கு விஞ் ஞானிகள் தயாராகி வருகின்றனர். மனிதர்களிடம் இதை பரிசோதிக்க நீண்ட காலம் பிடிக்கும் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்

சிறுவர்களில் மூளைப் புற்றுநோயை தோற்றுவிக்கும் மரபணு அலகு கண்டுபிடிப்பு


பிரித்தானிய கேம்பிரிஷ் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் சிறுவர்கள் மத்தியில் மூளையில் ஏற்படும் புற்றுநோய்க்கு அநேகம் காரணமாக விளங்கும் மரபணு அலகை (gene) கண்டறிந்துள்ளனர்.இந்த மரபணு அலகானது மரபணு அலகுகளின் இணைவால் உருவாகும் ஒரு fusion gene என்று கண்டறியப்பட்டுள்ளதுடன் எதிர்காலத்தில் இந்த மரபணு அலகின் தொழிற்பாட்டை நிரோதிப்பதன் மூலம் சிறுவர்கள் மத்தியில் மூளைப் புற்றுநோய் தோன்றுவதிலின்றும் குறிப்பிடத்தக்க அளவுக்கு பாதுகாப்பளிக்க முடியும் என்று விஞ்ஞானிகள் கருத்து வெளியிட்டுள்ளனர்.இக்கண்டுபிடிப்பு இத்துறையில் சிறந்த முன்னுதாரணக் கண்டுபிடிப்பாகி இருப்பதோடு எதிர்கால ஆய்வுகள் பலவற்றுக்குமான உறுதியான ஆரம்ப அடித்தளத்தை இட்டிப்பதாக விஞ்ஞானிகள் கருதுகின்றனர்

பெண்களின் கைகள் சுத்தமில்லை-அமெரிக்க ஆய்வின் தகவல்


பொதுவாக பெண்களின் கைகளில் குறிப்பாக உள்ளங்கைகளில் ஆண்களை விட 50% அதிகமான நோய் விளைவிக்கும் பக்ரீரியாக்கள் வாழ்வதாக அமெரிக்காவில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் இருந்து கண்டறியப்பட்டுள்ளது.சாதாரணமாக ஒரு மனிதனின் கையில் 150இனங்களைச் சேர்ந்த பக்ரீரியாக்கள் வாழ்வது இனங்காணப்பட்டுள்ளது.இருப்பினும் மனிதர்களின் கைகளில் மொத்தமாக சுமார் 4700க்கும் மேலான வேறுபட்ட இனங்களைச் சேர்ந்த பக்ரீரியாக்கள் உயிர்வாழ்கின்றன என்றும் கண்டறியப்பட்டுள்ளது.இவற்றுள் பல நோயாக்கிகள் ஆகவும் விளங்குகின்றன.ஆண்களின் கைகள் அதிகம் அமிலத்தன்மை உடையவையாக இருப்பதால் பெண்களோடு ஒப்பிடும் போது ஒப்பீட்டளவில் அங்கு பக்ரீரியாக்களின் எண்ணிக்கை குறைவாக காணப்படுகின்றன.இருந்தாலும் ஆண்களும் பெண்களைப் போலவே பல வகை பக்ரீரியாக்களின் பரவலுக்கும் தொற்றுக்கும் காரணமாக இருக்கின்றனர்.சுரக்கப்படும் வியர்வை,கைகளில் காணப்படும் நெய் சுரப்பிகள் மற்றும் சுரக்கப்படும் ஓமோன்கள் என்பனவற்றின் தன்மையின் அடிப்படையில் பெண்களின் கைகளில் ஆண்களை விட அதிக பக்ரீரியாக்கள் வாழ இடமளிக்கப்படும் நிலை தோன்றியிருக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.எதிர்காலத்தில் பெண்கள் மற்றும் ஆண்களுக்கு என்று தனித்துவமான கைகளில் ஈரலிப்பை பேணப் பயன்படும் பசைகளைத் தயாரிக்கவும் மற்றும் பக்ரீரியா நீக்கி சுத்திகரிப்பு திராவியங்களை பாவிப்பதன் மூலம் நோய்த்தொற்றல்களை தடுப்பது தொடர்பில் பெண்களையும் ஆண்களையும் அறிவூட்ட கூடிய அளவுக்கு இவ்வாய்பை பயன்படுத்த முடியும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.அதுமட்டுமன்றி சில விடைதெரியாத கேள்விகளும் இந்தக் கண்டுபிடிப்பை அடுத்து எழுந்திருக்கின்றன.அவற்றுக்கு விடை காண வேண்டிய பொறுப்பு ஆராய்ச்சியாளர்களைச் சேர்ந்துள்ளது

தூக்கம் குறைவதால் புற்றுநோய் வாய்ப்பு?


புற்றுநோயைத் தவிர்ப்பதற்காக வழக்கமான உடற்பயிற்சிகளை செய்யும் பெண்கள், குறைந்த அளவு தூக்கத்தை மேற்கொள்வதால் உடற்பயிற்சியின் பலன் கிடைக்காத நிலையை ஏற்படுத்திக் கொள்கிறார்கள்.அதாவது புற்றுநோயின்றி வாழ வேண்டுமானால், குறிப்பிட்ட அளவு தூக்கம் அவசியமாகிறது.ஏற்கனவே நடத்தப்பட்ட ஆய்வுகளின்படி அன்றாடம் உடற்பயிற்சியை தொடரும் பெண்களுக்கு புற்றுநோய் வருவதற்கான ஆபத்து இல்லை என்று தெரிய வந்தது. ஆனால், பெண்கள் மத்தியில் தூக்கமின்மையால் புற்றுநோய் ஏற்படக்கூடிய வாய்ப்பு உள்ளதாக வேறுசில ஆய்வுகள் தெரிவிக்கின்றன.அமெரிக்காவைச் சேர்ந்த 18 வயது முதல் 65 வயது வரையிலான சுமார் 5 ஆயிரத்து 968 பெண்களிடம் நடத்தப்பட்ட ஆய்வின் போது, பெண்களின் தூங்கும் தன்மை, உணவுப் பழக்கம், உடற்பயிற்சி போன்றவை பரிசோதிக்கப்பட்டது. பெண்களின் புற்றுநோய் ஏற்படும் தன்மை குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது.வாரத்தில் பெண்கள் மேற்கொள்ளும் உடற்பயிற்சி அவர்களின் புற்றுநோய் வாய்ப்பைக் குறைப்பதில் முக்கியப் பங்கு வகிப்பதாகவும், 7 மணி நேரத்திற்கும் குறைவாக தூங்குபவர்களுக்கு 47 விழுக்காடு அளவு புற்றுநோய் வாய்ப்பு உள்ளதாகவும் அந்த ஆய்வில் தெரிய வந்துள்ளது.குறைந்த அளவே தூக்கம் இருப்பவர்களுக்கு உடல் பருமன், சர்க்கரை நோய், உயர் இரத்த அழுத்தம், வலிப்பு, இதய நோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ள நிலையில், தற்போது புற்றுநோய் வாய்ப்புகள் உள்ளதாக வெளிவந்துள்ள தகவலும் குறிப்பிடத்தக்கதாகிறது

இதய வடிவத்தை மாற்றும் சிகரெட் புகை!


மிக அதிக அளவு சிகரெட் குடிப்பதால்,இதயத்தின் தோற்றம் மாறி சுருங்கும் வாய்ப்புகள் உள்ளதாக ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.சிகாகோவின் இலியானோஸ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் எலிகளை வைத்து நடத்திய ஆய்வின் அடிப்படையில் இத்தகவல் தெரிய வந்துள்ளது.அதிக அளவில் சிகரெட் புகைப்பதால் நோர்பைன்ப்ரைன் எனும் ஹார்மோன் சுரப்பது அதிகரித்து, இதயத்தில் சுரப்பியையும் ஊக்குவிப்பதுடன் இடது வென்டிரிக்கிளின் வடிவத்தை மாற்றிவிடக் கூடும் என்று அந்த ஆய்வு தெரிவிக்கிறது.சுமார் 5 வார காலம் ஆய்வு நடத்திய ஆராய்ச்சியாளர்கள் சிகரெட்டின் புகையால் மிட்டோஜென் சுரப்பியால் ஏற்படும் செல் வளர்ச்சி இதயத் தசைகளில் உருமாற்றத்தை ஏற்படுத்தி விடும் என்று தெரிய வந்துள்ளது.சிகரெட் புகையால் சுரக்கும் சுரப்பியானது இதயத்தில் காயம் உருவாக்கக் கூடியது என்றும் ஆய்வு முடிவு தெரிவிக்கிறது.சிகரெட் புகையில் காணப்படும் நிகோடினால் இதயம் தொடர்பான நோய்கள் ஏற்படுவது ஏற்கனவே உறுதிப்படுத்தப்பட்டுள்ளதை ஆராய்ச்சியாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.எனவே நீண்ட காலம் இதய பாதிப்பின்றி வாழ வேண்டுமா? இப்போதே சிகரெட் புகைப்பதை நிறுத்தி விடுங்கள்

சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் விட்டமின்-சி


விட்டமின்-சி அடங்கிய உணவுகளைப் பொருட்களை அதிகம் எடுத்துக் கொள்வதால்,இதயநோய் மற்றும் சர்க்கரை நோய் பாதிப்புகளில் இருந்து விடுபடலாம் என்று தெரிய வந்துள்ளது.சி ரியாக்டிவ் புரோட்டீன்-சிஆர்பி ஏற்படுவதாலேயே இதய நோயும்,சர்க்கரை நோயும் எளிதில் தாக்கக்கூடும் என்றும்,சிஆர்பி பாதிப்பை வைட்டமின்-சி சத்து கட்டுப்படுத்துவதால்,அந்நோய்கள் பாதிப்பில் இருந்து தப்பலாம் என்றும் கலிபோர்னியாவில் நடத்தப்பட்ட ஆய்வு முடிவு தெரிவிக்கிறது.மேலும் வைட்டமின்-ஈ கொண்ட உணவுப் பொருட்களை அன்றாடம் எடுத்துக் கொள்வதால் உடலுக்கு பெரிய அளவில் பலன் ஏதும் இல்லை என்றும் கண்டறியப்பட்டுள்ளது.என்றாலும் விட்டமின்-சி மற்றும் ஈ சத்துள்ள உணவை சாப்பிடுவதால்,மாரடைப்பு மற்றும் பக்கவாதத்தைக் கட்டுப்படுத்தும் என்பதற்கு எவ்வித உத்தரவாதமும் இல்லை என்றும் தெரிய வந்துள்ளது.இந்த ஆராய்ச்சியானது 2மாதம் மட்டுமே மேற்கொள்ளப்பட்டதாகவும்,நீண்டகால சோதனையில என்ன விளைவுகள் ஏற்படும் என்பதை தெரிவிக்க இயலாது என்றும் ஆய்வு முடிவு அறிக்கை கூறுகிறது.

தினமும் முட்டை சாப்பிடுபவரா நீங்கள்?அன்றாடம் ஒரு முட்டையை சாப்பிடுவோர் பலர் உண்டு. தினமும் ஒரு முட்டை சாப்பிடுபவர்களுக்கு சர்க்கரை நோய் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக புதிய ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.ஏற்கனவே சர்க்கரை நோய் உள்ளவர்கள் வாரத்திற்கு 2 முட்டை சாப்பிட்டால் கூட அது அவர்களின் சர்க்கரை நோய் பாதிப்பை மேலும் தீவிரப்படுத்தும் என்றும் ஆஸ்திரேலியாவில் நடத்தப்பட்ட அந்த ஆய்வு தெரிவிக்கிறது.தினமும் ஒரு முட்டை உண்பது சர்க்கரை நோயாளிகளின் உடல்நலத்திற்கு சிறந்தது என்று அமெரிக்காவில் நடத்தப்பட்ட ஆய்வைப் பின்பற்றி ஆஸ்திரேலிய விஞ்ஞானிகள் ஆய்வு மேற்கொண்டனர்.அதில் டைப் 2 டயபடிஸ் நோய் ஏற்படும் வாய்ப்பும், இரத்தத்தில் உள்ள குளுகோஸ் அளவை பராமரிப்பதிலும் முட்டையின் பங்கு உள்ளதாகத் தெரிய வந்துள்ளது.ஆஸ்திரேலியாவில் நடத்தப்பட்ட புதிய ஆய்வின்படி தினமும் முட்டை சாப்பிடுபவர்களுக்கு சர்க்கரை நோய் வருவதற்கான வாய்ப்புகள் 60 விழுக்காடு அதிகம் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.அதிலும் பெண்கள் தினமும் ஒரு முட்டை அல்லது வாரத்திற்கு 7-க்கும் அதிகமான அளவு முட்டைகளைச் சாப்பிட்டால், சர்க்கரை நோய் ஏற்படும் வாய்ப்புகள் 77 விழுக்காடு இருப்பதாகத் தெரிய வந்துள்ளது.அதே நேரத்தில் வாரத்திற்கு ஒரு முட்டை சாப்பிடலாம் என்றும், இதனால் பெரிய அளவில் உடல்நலத்திற்கு தீங்கு ஏற்படாது என்றும் ஆய்வை மேற்கொண்ட டாக்டர் மைக்கேல் தெரிவித்துள்ளார்.ஆண்கள் மற்றும் பெண்கள் 57 ஆயிரம் பேரிடம் முட்டை சாப்பிடும் பழக்கம் குறித்து சுமார் 20 ஆண்டுகள் இந்த ஆய்வு நடத்தப்பட்டது.

உடலுக்கு ஆபத்து ஏற்படுத்தும் டென்ஷன்-மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கைமனிதர்களுக்கு ஏற்படும் டென்ஷன்,மன அழுத்தத்தால் ஏற்படும் அபாயம் குறித்து கனடாவில் உள்ள டொராண்டோ பல்கலைக் கழகத்தை சேர்ந்த மருத்துவ நிபுணர்கள் ஆராய்ச்சி மேற்கொண்டனர்.அதில் பல்வேறு பயனுள்ள தகவல்கள் கிடைத்துள்ளன.மனிதர்களுக்கு பல்வேறு காரணங்களால் மன அழுத்தம் ஏற்படுகிறது,மன அழுத்தம் தான் சர்க்கரை வியாதி,இருதய பாதிப்பு உள்பட பல நோய்களுக்கு முக்கிய காரணம்.எனவே டென்ஷன்,மற்றும் மன அழுத்தம் ஏற்படாத வகையில் இருப்பது நல்லது.சிறிய விஷயம் கூட ஒருவரை பாதித்து மன அழுத்தம் ஏற்படலாம்.குறிப்பாக ஒரு பிரச்சினையில் என்ன முடிவு ஏற்படுமோ?என்ற எதிர்பார்ப்பு தான் மன அழுத்தத்துக்கு அறிகுறி.ஒரு விவகாரத்தில் சாதகமாகவோ,பாதகமாகவோ முடிவு ஏற்பட்டால் பெரிய அளவில் மன அழுத்தம் ஏற்படாது.ஆனால் எதிர்பார்ப்புக்கும்,ஏமாற்றத்துக்கும் இடையே உள்ள வாழ்க்கையில் தான் அதிக மன அழுத்தம் ஏற்படும்.அந்த பிரச்சினையின் முடிவு நிச்சயமற்ற நிலையில் இருக்கும் போது மூளையில் அது தொடர்பான பாதிவுகள் அதிகமாகி மன அழுத்தம்,டென்ஷன் கூடிவிடும்.பிரச்சினையின் முடிவில் சாதகமான சூழ்நிலை அமைந்தால் மன அழுத்தம் குறைந்து விடுகிறது.மாறாக பாதகமாக அமைந்தால் அதிகமான மன அழுத்தம் உருவாகி தீமை ஏற்படுகிறது.எனவே எந்த பிரச்சினை குறித்தும்,அதிக எதிர்பார்ப்பு,பயம் இல்லாமல் இருக்க வேண்டும்.எதிர்பார்ப்பு வீணாகி விட்டதே என்று நினைப்பவர்களுக்கு உடல் நிலையில் பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது என்கின்றனர் நிபுணர்கள்.

குடிகாரர்களுக்கு புதிய ஆபத்து-கண் பார்வை பாதிக்கும்


தினமும் குடிப்பவர்களுக்கு கண் பார்வை பாதிக்கப்படும் என்று ஆராய்ச்சியில் தெரிய வந்துள்ளது.ஆஸ்திரேலியாவில் உள்ள ராயல் விக்டோரியா கண் மற்றும் காது ஆராய்ச்சி மைய டாக்டர் எலைன் சோவ்க் குடிகாரர்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து ஆராய்ச்சி மேற்கொண்டார்.இதில் மொடா குடிகாரர்களுக்கு நரம்பு தளர்ச்சி மட்டுமல்ல,கண் பார்வையும் பாதிக்கப்படும் என்பதை அவர் கண்டறிந்து உள்ளார்.அதாவது தினமும் ஒரு புல் பாட்டில் மது குடிப்பவர்களுக்கும்,4பாட்டில் பீர் குடிப்பவர்களுக்கும் மற்றவர்களை விட 3மடங்கு கண் பார்வை பாதிக்கப்படும்.

குண்டானால் கருச்சிதைவு ஏற்படும்


மாறி வரும் உணவு பழக்க வழக்கத்தினால் உடல் பருமன் பிரச்சினை என்பது தற்போது அதிகரித்து வருகிறது. ஆண், பெண் வித்தியாசம் இன்றி அனைவருக்கும் இருக்கும் இந்த உடல் பருமன் பிரச்சினை ஓபிசிடி என்று அழைக்கப்படுகிறது.இதனால் பல்வேறு பிரச்சினைகள் ஏற்பட்டாலும், பெண்களுக்கு உடல் பருமனால் கருச்சிதைவு ஏற்படும் வாய்ப்புகள் அதிகமாக இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள ஸ்டான்போர்டு பல்கலைக்கழகத்தின் மருத்துவ பிரிவு விஞ்ஞானி டாக்டர் இன்னா லாண்டர்ஸ் தலைமையில் நடத்ததப்பட்ட ஆய்வில், உடம்பு குண்டாக இருக்கும் பெண்களுக்கு கருச்சிதைவு ஏற்படும் வாய்ப்புகள் அதிகமாக இருப்பது தெரிய வந்தது.கர்ப்ப காலத்தில் பெண்களின் உடல் எடை அதிகரிப்பது வழக்கம்தான். ஆனால் கர்ப்பம் தரிக்கும் முன்பே பெண்களின் உடல் எடை அதிகமாக இருந்தால் அது கருவுக்கு ஆபத்தைத் தரும். அதிக உடல் எடை காரணமாக ஏற்படும் உடலியல் மாற்றங்கள் கருச்சிதைவுக்கு வழி வகுக்கிறது.இதை உடல் குண்டான பெண்களின் டி.என்.ஏ. பரிசோதனைகள் மூலம் உறுதி செய்துள்ளோம் என்கிறார் மருத்துவர் இன்னா

கருவுற்ற பெண்கள் காபி அதிகம் அருந்த வேண்டாம்கருவுற்ற பெண்கள் காபி அதிகம் அருந்த வேண்டாம்!
கர்ப்பமாக உள்ள பெண்கள் நாளொன்றுக்கு இரண்டு சிறிய கோப்பை அளவுக்கு மேல் காபி அருந்த வேண்டாம் என்றும் அதிகமாக காபி அருந்தினால் பிறக்கும் குழந்தைகள் எடை குறைவாக பிறக்கும் என்றும் பிரிட்டன் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.நாளொன்றுக்கு 200 மில்லி கிராமுக்கு அதிகமாக காபி அருந்தும் கருத்தரித்த பெண்கள், எடை குறைவான குழந்தைகளை பெற்றெடுப்பதாக தெரிவித்துள்ளதோடு, பின்னால் இந்த குழந்தைகள் வளரும்போது சிக்கல்கள் ஏற்படுவதாகவும், சில குழந்தைகள் விரைவில் இறந்து போவதாகவும் பிரிட்டன் ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்துள்ளனர்.சுமார் 2,500 கருவுற்ற பெண்களிடம் கேள்வித்தாள்கள் கொடுத்து பதிலளிக்குமாறு செய்து ஆய்வு மேற்கொண்டனர். அதாவது குறிப்பாக இதில் அவர்கள் நாளொன்றுக்கு அருந்தும் காபியின் அளவு பற்றி விவரம் கோரப்பட்டது.இங்கிலாந்தில் உள்ள லீட்ஸ், லெய்செஸ்டர் பல்கலைக் கழகங்கள் இணைந்து நடத்திய இந்த ஆய்வின் விவரங்கள் "பிரிட்டிஷ் மெடிகல் ஜர்னலில்" வெளியிடப்படவுள்ளது.சில மாதங்களுக்கு முன் அமெரிக்காவிலிருந்து வெளியிடப்ப்ட்ட ஒரு ஆய்வு முடிவும் கருவுற்ற பெண்கள் நாளொன்றுக்கு 200 மில்லி கிராமுக்கு அதிகமாக காபி எடுத்துக் கொண்டால் ஏற்படும் தீய விளைவுகளை வெளியிட்டிருந்தது.கருத்தரித்த முதல் 12 வாரங்களுக்கு பெண்கள் காஃபைனிலிருந்து விலகி இருப்பது நல்லது. ஏனெனில் இந்த காலக்கட்டங்களில்தான் கருச்சிதைவு சாத்தியங்கள் அதிகம் என்று மகப்பேறு மருத்துவர்கள் கூறுகின்றனர்இளமையில் வறுமை கொடுமை மட்டுமன்றி மூளையின் செயற்திறனையும் பாதிக்கிறது
அமெரிக்காவில் வசதி படைத்த சூழலில் வளரும் மற்றும் வறுமைச் சூழலில் வளரும் குழந்தைகளிடத்தே நடத்தப்பட்ட ஆய்வில் இருந்து வறுமைச் சூழலில் நிலவும் அழுத்தங்கள் மத்தியில் வளரும் குழந்தைகளின் மூளைச் செயற்பாடு வசதி படைத்த சூழலில் வளரும் குழந்தைகளின் மூளைச் செயற்பாட்டினின்றும் வேறுபட்டிருப்பதை கண்டறிந்துள்ளனர்.வறுமைச் சூழலில் வளரும் பிள்ளைகளின் மூளையில் காணப்படும் பிரச்சனைகளுக்கு தீர்வு தேடும் பகுதியில் மின் கணத்தாக்கச் செயற்பாடுகளில் வேறுபாடு அவதானிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக மூளையின் prefrontal cortex பகுதியில் செயற்பாடு மந்தமாக இருப்பது அவதானிக்கப்பட்டுள்ளது.குறிப்பாக அவர்கள் பரிசோதனையின் போது சில வகை பார்வைத் தூண்டல்களை இனங்காணவோ அல்லது அவற்றைப் பெற்று கொண்டதன் பின்னான செயற்பாட்டைக் காட்டவோ இல்லை என்றும் அதுமட்டுமன்றி (prefrontal cortex) பகுதியால் வழங்கப்படும் மேலதிக உத்வேகத்தன்மை குறைவாகக் காணப்படுகிறது என்றும் ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.அதேவேளை முன்னொரு ஆய்வில் வறுமைச் சூழலில் வளரும் பிள்ளைகள் மற்றவர்களைக் காட்டினும் குறைவாகப் பேசுவதாகவும் கண்டறிந்துள்ளனர்.இதற்காக வறுமைச் சூழலில் வாழும் பெற்றோரைக் குறை கூற முடியாது என்று கருத்துரைக்கும் ஆய்வாளர்கள் இந்த ஆய்வு முடிவுகள் குழந்தைகள் எதிர்காலத்தில் எவ்வாறான சூழலில் வளர்க்கப்பட வேண்டும் என்ற அவசியத்தை எடுத்துரைக்கின்றன என்றும் அதற்கேற்ற வகையில் குழந்தை வளர்ப்புத் திட்டங்களையும் வகுக்க வேண்டும் என்று கூறுகின்றனர்.குழந்தைகள் வறுமைச் சூழலில் வாழ்வதால் அவர்கள் பெற்றுக் கொள்ளும் தகவல்/ தூண்டல்களின் அளவு குறைந்திருப்பதும், அழுத்தங்கள் மத்தியில் வாழ்வதால் மூளை முற்றான அபிவிருத்தியை காட்டத் தவறுவதுமே இதற்குக் காரணமாக இருக்கலாம் என்றும் தெரிவிக்கப்படுகிறது.இவற்றைத் தவிர்க்கும் வகையில் எதிர்காலத்தில் குழந்தைகளுக்குரிய சரியான வளர்ப்புச் சூழலை தீர்மானிக்க வேண்டியதுடன் வறுமைச் சூழலில் வளரும் குழந்தைகளுக்குச் சரியான பயிற்சிகளும் அளிக்கப்பட வேண்டும் என்றும் பரிந்துரைக்கின்றனர் ஆய்வாளர்கள்.இதைத்தான் தமிழ் புலவர் ஒளவையார் இளமையில் வறுமை கொடுமை என்று பல நூறு ஆண்டுகளுக்கு முன்னரே சொல்லிவிட்டாரோ..பாலில் உருவாகும் பாக்டீரியா
பால் உடல் நலத்திற்கு மிகவும் ஏற்றது.பொதுவாக பாலை காய்ச்சி குடிப்பவர்கள் ஒருபுறம் என்றால்,வேறு சிலர் பச்சைப் பாலை (கறந்த பால்) அப்படியே குடிப்பார்கள்.ஆனால்,பச்சைப் பாலில் (raw milk) பாக்டீரியா இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.மிகக் குறைந்த வெப்பநிலையிலும், குளிர்வூட்டப்பட்ட போதிலும் இந்த பாக்டீரியா வளரக் கூடும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.இஸ்ரேல் நாட்டின் ஹைஃபா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த டாக்டர் மால்கா ஹால்பெர்ன் தலைமையிலான குழுவினர் ஆய்வு செய்து பச்சைப் பாலில் பாக்டீரிய இருப்பதை கண்டறிந்துள்ளனர். இந்தவகை பாக்டீரியாவை முன்னர் ஆய்வு செய்தவர்கள் வெளியிடவில்லை என்றும் டாக்டர் மால்கா குறிப்பிட்டுள்ளார்.கிறிசியோபாக்டீரியம் ஒரானிமென்ஸ் என்ற அந்த நுண்ணுயிரியானது குளிர்ந்த வெப்பநிலையிலும் கூட பாலில் பரவக்கூடியதாகத் தெரிய வந்துள்ளது. இதன்மூலம் பாலைக் காய்ச்சாமல் குடிப்பதால் பாதிப்புகள் ஏற்படக்கூடும் என்று தெரிய வந்துள்ளது.மாட்டில் இருந்து கறக்கப்படும் பாலானது பல்வேறு காரணங்களால் கெட்டுப் போகக்கூடும் என்பதால்,பாலை குளிரூட்டி பதப்படுத்துதலை பொதுவாக மேற்கொள்வார்கள். ஆனால்,குளிரூட்டப்பட்டாலும்,கிறிசியோபாக்டீரியம் காரணமாக பாதிப்புகள் ஏற்படக்கூடும் என்று தற்போது தெரிய வந்துள்ளது.புதிய எரிபொருள் கண்டுபிடிப்பு
இப்போது பெட்ரோல்,டீசலால் ஓடும் கார்கள் இனி வருங்காலத்தில் ஹைட்ரஜன் பந்துகள் மூலம் இயங்கும் வாய்ப்புகள் உருவாகி உள்ளன.பூமிக்கடியில் இருந்து எடுக்கப்படும் பெட்ரோல்,டீசல் போன்ற எரிபொருட்கள் இன்னும் குறிப்பிட்ட சில ஆண்டுகள்தான் கிடைக்கும். எனவே சுற்றுச் சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத மாற்று எரிசக்தியை கண்டுபிடிக்கும் முயற்சிகளில் பல்வேறு நாடுகளின் விஞ்ஞானிகள் ஈடுபட்டு இருக்கிறார்கள்.அந்த வகையில் சுவீடன் நாட்டில் உள்ள உப்சாலா பல்கலைக்கழகத்தின் மெட்டிரீயல்ஸ் சயின்ஸ் துறையின் பேராசிரியர் லார்ஸ் ஸ்டென்மார்க் சுற்றுச்சூழலுக்கு உகந்த புதிய எரிபொருள் ஒன்றை உருவாக்கியுள்ளார்.அதன்படி ஹைட்ரஜன் வாயுவால் நிரப்பப்பட்ட சிறிய பந்துகளை கொண்டு கார்களை இயக்க முடியும் என்று அவர் கண்டுபிடித்துள்ளார்.அவருடைய இந்த கண்டுபிடிப்பு வர்த்தக ரீதியாக நடைமுறைக்கு வரும்போது தற்போது போக்குவரத்துக்கு பெட்ரோல்டீசலை பெரிதும் சார்ந்திருப்பது பெருமளவில் குறையும்.சிறிய பந்துகளில் ஹைட்ரஜன் வாயுவை நிரப்புவதன் மூலம் தீ விபத்து மற்றும் வெடி விபத்து போன்றவற்றை தவிர்க்க முடியும் என்று ஸ்டென்மார்க் தெரிவிக்கிறார்.வட்ட பந்து வடிவில் ஹைட்ரஜன் வாயுவை சேமித்து வைப்பதானது நீள உருளைகளில் சேமித்து வைப்பதைக் காட்டிலும் இரு மடங்கு அழுத்தத்தை தாங்கக்கூடியது.கார் புறப்பட்டதும் இந்த பந்துகள் உடைந்து அதில் நிரப்பப்பட்ட வாயு வெளியேறி கார் இயங்குவதுடன் எந்தவித தீங்கும் ஏற்படுத்தாமல் அந்த வாயு வளிமண்டலத்தில் கலந்து விடும் என்று அவர் தெரிவிக்கிறார்.பெட்ரோல் டீசல் தட்டுப்பாடு மற்றும் சுற்றுச்சூழல் மாசு ஆகியவற்றால் அவதிப்பட்டு வரும் மனித குலத்துக்கு இது போன்ற ஒரு நல்ல மாற்று எரிபொருள் தேவைதான்.விரைவில் இது நடைமுறைக்கு வர வேண்டும் என்பதே நம்முடைய எதிர்பார்ப்புசெல்போனில் அதிக நேரம் பேசுகிறீர்களா?
செல்போனில் அதிக நேரம் பேசுவதால், உடல் நலத்திற்கு பல பாதிப்புகள் ஏற்படும் என்று தெரிய வந்துள்ளது. இணைய தளம் ஒன்றில் வெளியான தகவலின் அடிப்படையில், செல்போன்களில் இருந்து வெளியாகும் கதிர்வீச்சு மிகக் குறைந்த திறன் கொண்டதுதான் என்றாலும், அதிக நேரம் காதுகளில் வைத்து பேசிக் கொண்டிருப்பதால் ஏராளமான உபாதைகள் ஏற்படுவதாகத் தெரிய வந்துள்ளது.செல்போன்களில் இருந்து வெளிப்படும் கதிர்வீச்சினால், மூளை நரம்புகள் பாதிக்கப்படக் கூடிய வாய்ப்புகள் உள்ளதாகவும் அந்த தகவல் தெரிவிக்கிறது. தவிர எண்ணற்ற உடல் நலம் தொடர்பான நோய்களும் ஏற்படுவதாக ஆய்வு ஒன்றை மேற்கோள்காட்டி அந்த தகவல் கூறுகிறது.மேலும் கர்ப்பிணிப் பெண்கள் அதிக நேரம் செல்போனில் உரையாடுவதைத் தவிர்க்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.பொதுவாக கர்ப்பிணிப் பெண்களுக்கு கதிர்வீச்சு தாக்குதல் இல்லாதவாறு பாதுகாத்துக் கொள்தல் அவசியம். அதில் செல்போன் கதிர்வீச்சும் அடங்கும் என்று குறிப்பிட்டுள்ள அந்த தகவல், தேவைப்பட்டால் மட்டும் கர்ப்பிணிப் பெண்கள் செல்போன்களில் பேசலாம் என்று தெரிவிக்கிறதுபசியைப் பாதிக்கும் தீவிர உடற்பயிற்சி?
நீண்ட நேரம் தீவிரமாக உடற்பயிற்சி செய்வதால், பசியை ஏற்படுத்தக்கூடிய ஹார்மோன்கள் சுரப்பது பாதிக்கப்படலாம் என்று புதிய ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. பொதுவாக பசியை ஏற்படுத்தக்கூடிய ஹார்மோன்களாக க்ரலின் மற்றும் பெப்டைட் ஒய்ஒய் இரண்டும் அறியப்படுகிறது.அதிதீவிரமாக உடற்பயிற்சி செய்வதால் இந்த இரு ஹார்மோன்களும் பாதிப்புக்குள்ளாவதாகத் தெரிய வந்துள்ளது.ட்ரெட்மில் எனப்படும் சைக்கிளிங் போன்ற உடற்பயிற்சியை சுமார் ஒருமணி நேரம் மேற்கொள்வதால், இந்த ஹார்மோன்கள் சுரப்பது பாதிப்படையக் கூடும் என்றும், 90 நிமிட நேரம் பளுதூக்குதலில் ஈடுபடுவதால் க்ரலின் சுரப்பது பாதிக்கப்படுவதாகவும் வாஷிங்டனில் நடத்தப்பட்ட ஆய்வு தெரிவித்துள்ளது.பல்கலைக்கழக மாணவர்கள் 11 பேரிடம் சுமார் 38 மணி நேரம் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. முதலில் ஒருமணி நேரம் ட்ரெட்மில் பயிற்சியும், 7 மணி நேர ஓய்வுக்குப் பின் 90 நிமிட நேர பளுதூக்குதல் பயிற்சியும் மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டது. மீண்டும் ஆறரை மணி நேர ஓய்வுக்குப் பின் உடற்பயிற்சி எதையும் செய்யாமல் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டனர். அதன் அடிப்படையில் மேற்கண்ட முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.பல்வேறு நிலைகளில் அவர்களின் பசி குறித்து கேட்டறியப்பட்டது. உடற்பயிற்சியின் போது அவர்களுக்கு உணவும் வழங்கப்பட்டது. க்ரலின் மற்றும் பெப்டைட் ஒய்ஒய் அளவு குறித்தும் பல்வேறு நிலைகளில் கேட்டறியப்பட்டது.பளு தூக்குதல் பயிற்சியைப் பொருத்தவரை இரு ஹார்மோன்களில் ஒன்று பாதிக்கப்படுவது தெரிய வந்ததாக அந்த ஆய்வு கூறுகிறது