THOUSANDS OF FREE BLOGGER TEMPLATES

mercredi 25 mars 2009

ஒற்றைத் தலைவலி


தலைவலியும்,காய்ச்சலும் தனக்கு வந்தால் தெரியும் என்பார்கள்".தலைவலியால் அவதிப்படாத மனிதர்களே இருக்கமுடியாது என்பதால் தலைவலி தொடர்பான ஆராய்ச்சிகள் உலகெங்கும் தொடர்ந்து கொண்டுதானிருக்கிறது.தலைவலியில்,ஒற்றைத் தலைவலி எனப்படும்"மைகிரேன்"தலைவலியால் அவதிப்படுவோர் பலர்.இத்தகைய வலி வந்தால் எதுவுமே செய்ய இயலாது.சிலருக்கு இரண்டு மூன்று நாள் வரை கூட இது நீடிக்கும்.தலையில் நீர் கோர்ப்பதால் இந்த மைகிரேன் தலைவலி வருவதாக கூறப்பட்டாலும்,தட்ப வெப்ப நிலை மற்றும் போதிய காற்று இல்லாததாலும் மைகிரேன் தலைவலி வரும் என ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். வெப்ப நிலை திடீரென உயர்வதால் தலைவலி உண்டாகும் என்றும் காற்றழுத்த வேறுபாடு காரணமாக தலைவலி ஏற்படும் என்றும் ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். இஸ்ரேலைச் சேர்ந்த நரம்பியல் டாக்டர் சேத் தலைமையிலான மருத்துவக் குழு கடுமையான தலைவலியால் அவதிப்படும் 7,054-பேரை ஆய்வு செய்தது.இவர்களில் பெரும்பாலோர் 7-ஆண்டுகளுக்கும் மேலாக கடுமையான தலைவலியால் அவதிப்பட்டு வந்ததாகக் கூறினர். இதற்கான காரணத்தை ஆராய்ந்தபோது,தட்ப வெப்ப நிலையில் முந்தைய தினத்தைக் காட்டிலும் 5-டிகிரி செல்சியஸ் உயரும்போது இவர்களுக்கு கடும் தலைவலி ஏற்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.அத்துடன் காற்றழுத்தத்தில் ஏற்படும் மாற்றம் காரணமாக 72-மணி நேரம் வரை லேசான தலைவலியுடன் இவர்கள் அவதிப்பட்டதும் ஆய்வில் தெரியவந்துள்ளது. இத்தகைய ஆராய்ச்சி முடிவு மிகவும் உபயோகமானது என்று லண்டனில் உள்ள நரம்பியல் துறை பேராசிரியர் பீட்டர் கோட்ஸ்பி தெரிவித்துள்ளார்.இதன்மூலம் நோயாளிக்கு உரிய மருத்துவ சிகிச்சை அளிக்க முடியும்.மைகிரேன் தலைவலியை அதிகரிக்கும் காரணிகளில் சில வகை உணவு மற்றும் மதுப் பழக்கம் மட்டுமின்றி மன இறுக்கமும் காரணம் என ஆய்வில் தெரியவந்துள்ளது.