THOUSANDS OF FREE BLOGGER TEMPLATES

samedi 20 décembre 2008

பெண்களின் கைகள் சுத்தமில்லை-அமெரிக்க ஆய்வின் தகவல்


பொதுவாக பெண்களின் கைகளில் குறிப்பாக உள்ளங்கைகளில் ஆண்களை விட 50% அதிகமான நோய் விளைவிக்கும் பக்ரீரியாக்கள் வாழ்வதாக அமெரிக்காவில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் இருந்து கண்டறியப்பட்டுள்ளது.சாதாரணமாக ஒரு மனிதனின் கையில் 150இனங்களைச் சேர்ந்த பக்ரீரியாக்கள் வாழ்வது இனங்காணப்பட்டுள்ளது.இருப்பினும் மனிதர்களின் கைகளில் மொத்தமாக சுமார் 4700க்கும் மேலான வேறுபட்ட இனங்களைச் சேர்ந்த பக்ரீரியாக்கள் உயிர்வாழ்கின்றன என்றும் கண்டறியப்பட்டுள்ளது.இவற்றுள் பல நோயாக்கிகள் ஆகவும் விளங்குகின்றன.ஆண்களின் கைகள் அதிகம் அமிலத்தன்மை உடையவையாக இருப்பதால் பெண்களோடு ஒப்பிடும் போது ஒப்பீட்டளவில் அங்கு பக்ரீரியாக்களின் எண்ணிக்கை குறைவாக காணப்படுகின்றன.இருந்தாலும் ஆண்களும் பெண்களைப் போலவே பல வகை பக்ரீரியாக்களின் பரவலுக்கும் தொற்றுக்கும் காரணமாக இருக்கின்றனர்.சுரக்கப்படும் வியர்வை,கைகளில் காணப்படும் நெய் சுரப்பிகள் மற்றும் சுரக்கப்படும் ஓமோன்கள் என்பனவற்றின் தன்மையின் அடிப்படையில் பெண்களின் கைகளில் ஆண்களை விட அதிக பக்ரீரியாக்கள் வாழ இடமளிக்கப்படும் நிலை தோன்றியிருக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.எதிர்காலத்தில் பெண்கள் மற்றும் ஆண்களுக்கு என்று தனித்துவமான கைகளில் ஈரலிப்பை பேணப் பயன்படும் பசைகளைத் தயாரிக்கவும் மற்றும் பக்ரீரியா நீக்கி சுத்திகரிப்பு திராவியங்களை பாவிப்பதன் மூலம் நோய்த்தொற்றல்களை தடுப்பது தொடர்பில் பெண்களையும் ஆண்களையும் அறிவூட்ட கூடிய அளவுக்கு இவ்வாய்பை பயன்படுத்த முடியும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.அதுமட்டுமன்றி சில விடைதெரியாத கேள்விகளும் இந்தக் கண்டுபிடிப்பை அடுத்து எழுந்திருக்கின்றன.அவற்றுக்கு விடை காண வேண்டிய பொறுப்பு ஆராய்ச்சியாளர்களைச் சேர்ந்துள்ளது

0 commentaires: