THOUSANDS OF FREE BLOGGER TEMPLATES

samedi 20 décembre 2008

இணையத்தள உபயோகம் மூளையின் செயல்திறனை ஊக்குவிக்கிறது அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள்


இணையத்தளங்களை உபயோகிப்பதானது நடுத்தர வயதுடையவர்களுக்கும் வயதானவர்களுக்கும் மூளையின் திறன் பலமடைய உதவுவதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.தீர்மானமெடுத்தல், குழப்பநிலைகளுக்கான காரணத்தை பகுத்தாராய்தல் என்பனவற்றை கட்டுப்படுத்தும் மூளையின் மையங்கள், இணையத்தள தேடுதலின்போது ஒழுங்கமைக்கப்படுவதாக மேற்படி ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. மேலும், வயதாதலுடன் தொடர்புடைய மனோவியல் மாற்றங்களை தடுக்கவும் இணையத்தள தேடுதல் உதவுவதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். மேற்படி ஆய்வின் முடிவுகள் அமெரிக்க மனோவியல் மருத்துவ வெளியீட்டில் இடம்பெற்றுள்ளன. மூளை வயதாவதன் காரணமாக அதன் கலங்களின் செயற்பாடுகளிலான குறைபாடு உள்ளடங்கலான பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன. குறுக்கெழுத்து புதிர்கள் போன்றவற்றின் மூலம் மூளையின் செயற்பாட்டு திறனை ஊக்குவிக்க முடியும் என முன்னர் கண்டறியப்பட்ட நிலையில், அதற்கு இணையத்தள பயன்பாடும் கணிசமான அளவில் உதவுவது தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேற்படி ஆய்வுக்கு தலைமை தாங்கிய பேராசிரியர் காரி ஸ்மோல் விபரிக்கையில், ""இணையத்தள தேடலானது மூளையின் சிக்கல்மிகு செயற்பாடுகளுடன் தொடர்புடையதாக உள்ளது. இது மூளையின் தொழிற்பாட்டை விருத்தி செய்கிறது'' என்று கூறினார்

0 commentaires: