THOUSANDS OF FREE BLOGGER TEMPLATES

samedi 20 décembre 2008

உடலுக்கு ஆபத்து ஏற்படுத்தும் டென்ஷன்-மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை



மனிதர்களுக்கு ஏற்படும் டென்ஷன்,மன அழுத்தத்தால் ஏற்படும் அபாயம் குறித்து கனடாவில் உள்ள டொராண்டோ பல்கலைக் கழகத்தை சேர்ந்த மருத்துவ நிபுணர்கள் ஆராய்ச்சி மேற்கொண்டனர்.அதில் பல்வேறு பயனுள்ள தகவல்கள் கிடைத்துள்ளன.மனிதர்களுக்கு பல்வேறு காரணங்களால் மன அழுத்தம் ஏற்படுகிறது,மன அழுத்தம் தான் சர்க்கரை வியாதி,இருதய பாதிப்பு உள்பட பல நோய்களுக்கு முக்கிய காரணம்.எனவே டென்ஷன்,மற்றும் மன அழுத்தம் ஏற்படாத வகையில் இருப்பது நல்லது.சிறிய விஷயம் கூட ஒருவரை பாதித்து மன அழுத்தம் ஏற்படலாம்.குறிப்பாக ஒரு பிரச்சினையில் என்ன முடிவு ஏற்படுமோ?என்ற எதிர்பார்ப்பு தான் மன அழுத்தத்துக்கு அறிகுறி.ஒரு விவகாரத்தில் சாதகமாகவோ,பாதகமாகவோ முடிவு ஏற்பட்டால் பெரிய அளவில் மன அழுத்தம் ஏற்படாது.ஆனால் எதிர்பார்ப்புக்கும்,ஏமாற்றத்துக்கும் இடையே உள்ள வாழ்க்கையில் தான் அதிக மன அழுத்தம் ஏற்படும்.அந்த பிரச்சினையின் முடிவு நிச்சயமற்ற நிலையில் இருக்கும் போது மூளையில் அது தொடர்பான பாதிவுகள் அதிகமாகி மன அழுத்தம்,டென்ஷன் கூடிவிடும்.பிரச்சினையின் முடிவில் சாதகமான சூழ்நிலை அமைந்தால் மன அழுத்தம் குறைந்து விடுகிறது.மாறாக பாதகமாக அமைந்தால் அதிகமான மன அழுத்தம் உருவாகி தீமை ஏற்படுகிறது.எனவே எந்த பிரச்சினை குறித்தும்,அதிக எதிர்பார்ப்பு,பயம் இல்லாமல் இருக்க வேண்டும்.எதிர்பார்ப்பு வீணாகி விட்டதே என்று நினைப்பவர்களுக்கு உடல் நிலையில் பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது என்கின்றனர் நிபுணர்கள்.

0 commentaires: