THOUSANDS OF FREE BLOGGER TEMPLATES

samedi 20 décembre 2008



பசியைப் பாதிக்கும் தீவிர உடற்பயிற்சி?
நீண்ட நேரம் தீவிரமாக உடற்பயிற்சி செய்வதால், பசியை ஏற்படுத்தக்கூடிய ஹார்மோன்கள் சுரப்பது பாதிக்கப்படலாம் என்று புதிய ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. பொதுவாக பசியை ஏற்படுத்தக்கூடிய ஹார்மோன்களாக க்ரலின் மற்றும் பெப்டைட் ஒய்ஒய் இரண்டும் அறியப்படுகிறது.அதிதீவிரமாக உடற்பயிற்சி செய்வதால் இந்த இரு ஹார்மோன்களும் பாதிப்புக்குள்ளாவதாகத் தெரிய வந்துள்ளது.ட்ரெட்மில் எனப்படும் சைக்கிளிங் போன்ற உடற்பயிற்சியை சுமார் ஒருமணி நேரம் மேற்கொள்வதால், இந்த ஹார்மோன்கள் சுரப்பது பாதிப்படையக் கூடும் என்றும், 90 நிமிட நேரம் பளுதூக்குதலில் ஈடுபடுவதால் க்ரலின் சுரப்பது பாதிக்கப்படுவதாகவும் வாஷிங்டனில் நடத்தப்பட்ட ஆய்வு தெரிவித்துள்ளது.பல்கலைக்கழக மாணவர்கள் 11 பேரிடம் சுமார் 38 மணி நேரம் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. முதலில் ஒருமணி நேரம் ட்ரெட்மில் பயிற்சியும், 7 மணி நேர ஓய்வுக்குப் பின் 90 நிமிட நேர பளுதூக்குதல் பயிற்சியும் மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டது. மீண்டும் ஆறரை மணி நேர ஓய்வுக்குப் பின் உடற்பயிற்சி எதையும் செய்யாமல் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டனர். அதன் அடிப்படையில் மேற்கண்ட முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.பல்வேறு நிலைகளில் அவர்களின் பசி குறித்து கேட்டறியப்பட்டது. உடற்பயிற்சியின் போது அவர்களுக்கு உணவும் வழங்கப்பட்டது. க்ரலின் மற்றும் பெப்டைட் ஒய்ஒய் அளவு குறித்தும் பல்வேறு நிலைகளில் கேட்டறியப்பட்டது.பளு தூக்குதல் பயிற்சியைப் பொருத்தவரை இரு ஹார்மோன்களில் ஒன்று பாதிக்கப்படுவது தெரிய வந்ததாக அந்த ஆய்வு கூறுகிறது

0 commentaires: